NEET தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு!

Jobrascals

NEET தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு!

மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

வயது உச்ச வரம்பு இல்லை:

தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் (Public Eligibility Entrance Test) தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் 2013 மே 5ம் தேதி முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வை, முன்பு நடுவண் இடைக்கல்வி வாரியம் நடத்தியது. இருப்பினும் கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகம் செய்த காலத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. வசதி உடையவர்களால் மட்டுமே நீட் தேர்வுக்கு சிறந்த பயிற்சியை பெற்று மருத்துவர் ஆக முடியும்.

நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சம பயிற்சி வழங்கப்படுவதில்லை. நீட் தேர்வு ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எதிராவும், பயிற்சி வகுப்பு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக தான் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் நிலவி வருகிறது. மேலும் நீட் தேர்வு எழுத தேர்வர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும். இருப்பினும் தற்போது தேசிய மருத்துவ ஆணையம் நீட் எழுதுவதற்கான வயது வரம்பை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த அறிக்கை வரவேற்கத்தக்கது.

அந்த அறிக்கையில் நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு இனி இல்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் இந்த அறிவிப்பை குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் தற்போது மேற்கொண்டுள்ள, நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இனி இல்லை என்ற நடவடிக்கை மூலம் அதிகம் பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். நாட்டில் அதிக மருத்துவர்களை உருவாக்க இயலும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *