மொபைல் மூலமாக இ–பாஸ் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து வர இ–பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை பெறுவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Click To Join Get More Job Updates Details | ||
Most Important Updates Share With Yours Friends |
இ–பாஸ் முறை
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் இ–பாஸ் வைத்திருத்தல் அவசியம் ஆகும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp சேவை இன்று முதல் நிறுத்தம்? பிரைவசி பாலிசி விளைவு!
ஆனால் பதிவு செய்திருத்தல் அவசியம். இ–பாஸை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மொபைலில் பதிவு செய்து பெற வேண்டிய வழிமுறைகள் இதோ,
முதலில், https.//eregister.tnega.org/#/customer/pass என்ற வலைதளத்திற்குள் செல்ல வேண்டும்.
இதில், உங்களது மொபைல் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பதிவு செய்து உள்நுழையவும்.
பின், உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை கேட்கப்படும் இடத்தில் பதிவிடவும்.
பின், நீங்கள் பயணம் செல்ல இருக்கும் இடத்தினை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக, உங்களது பெயர், முகவரி ஆகியவற்றை பதிவு செய்யவும். பின், நீங்கள் செல்லும் வீட்டின் முகவரி ஆகியவற்றியும் பதிவு செய்யவும்.
பயணத்தின் நேரம், பயணத்திற்கான காரணம் ஆகியவற்றையும் பதிவு செய்யவும்.
காரணத்திற்கான ஆவணத்தை சமர்ப்பிக்கவும். (திருமணம் என்றால், திருமண அழைப்பிதழ், மருத்துவ அவசரம் என்றால், அது குறித்த ஆவணம்)
பின், பயனர்களின் விவரம், வாகன எண், அடையாள அட்டை (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஏதுனும் ஒன்று) ஆகியவற்றையும் சமர்ப்பிக்கவும்.
விவரங்களை நிரப்பியதும், அதனை சப்மிட் செய்யவும். பின், உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டதும் உங்களுக்கு இ பாஸ் வழங்கப்படும்.